அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ இன்று (பிப்ரவரி 23) வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுக கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுக்கு எதிராக செயல்பட்ட சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகி ஏ வி ராஜுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் ஏ.வி ராஜு. அப்போது அவர் நடிகை த்ரிஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் கருணாஸ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.
கூவத்தூர் விவகாரம் மற்றும் நடிகை த்ரிஷா குறித்த அவரது கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் ஏ.வி ராஜு.
எனினும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் நடிகை த்ரிஷா சார்பில் ஏவி ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏ.வி ராஜு இன்று வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்பதை விளக்கவில்லை. மேலும் அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு என்றும்,
கட்சியிலிருந்து தன்னை நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுஅனுப்பிய வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அறிமுக போட்டியில் அதகளம்… கொண்டாடும் ஆர்.சி.பி ரசிகர்கள் : யார் இந்த ஆகாஷ் தீப்?
அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2
“எப்படி ரிட் மனு தாக்கல் செய்தீர்கள்?” : ED வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!