பியூட்டி டிப்ஸ்: மெலிந்த உடல்வாகு… பயப்படத் தேவையில்லை!

Published On:

| By christopher

A slim body need not be feared

உடல் பருமனைக் குறைப்பதற்கான உணவுமுறைகளைத் தேடும் நபர்கள் ஒருபுறம்… ‘எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பே பிடிக்க மாட்டேங்குது…’ என மெலிந்த உடல்வாகு குறித்து அங்கலாய்ப்பவர்களும் மறுபுறம். இப்படி உடல் எடையைக் கூட்டுவதிலோ, குறைப்பதிலோ குறுக்கு வழி மட்டும் வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். A slim body need not be feared

நோய்நிலை காரணமாக இல்லாமல் இயல்பிலேயே பலரது உடல்வாகு ஒல்லியாக இருப்பதென்பது இயற்கையின் வடிவமைப்பு. உடல் அமைப்பைப் பொறுத்தவரை மரபு, உணவு, உடற்பயிற்சி ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

உடல்சோர்வின்றி எவ்வித அடிப்படை நோய்களுமின்றி ஒருவரது உடல்வாகு மெலிதாகவே இருக்கிறதெனில் அவ்வளவாக பயப்படத் தேவையில்லை. ஆனால், ஏதாவது சத்துக்குறைபாடு காரணமாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். வேறு சில நோய்நிலை சார்ந்த பரிசோதனைகளைச் செய்துவிட்டு பிரச்சினை இல்லையெனில் உணவில் கவனம் செலுத்தலாம்.

இந்த நிலையில், ‘உடனடியாக உடல் எடையைக் குறைக்க வேண்டும்… அதற்கு ஏதாவது மருந்தும் உணவும் இருக்கா…’ என்ற கேள்வியும் பலருக்கும் உண்டு. அப்படியான ஒன்று இவ்வுலகில் இல்லை என்பதே அதற்கான பதில்.

அதே போல மெலிதாக இருக்கும் தேகத்தை அடுத்த சில வாரங்களில் அதிகரித்துவிட முடியுமா என்றாலும் நிச்சயமாக முடியாது. எனவே, குறுக்குவழியைப் பின்பற்றாமல் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ திட்டமிட வேண்டியது அவசியம்.

அவ்வகையில் உடல் எடையைக் கூட்ட உடலுக்கு வலிமையைக் கொடுக்கும் வகைமையிலான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

அந்த வகையில் வேக வைக்கப்பட்ட இறைச்சி ரகங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம். மீன், இறால் ரக உணவுகள் நல்ல தேர்வு. A slim body need not be feared

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லத்தைத் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

பாலும் பால் பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பர்ய சிற்றுண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை அதிகரிக்கக் கூடியவை.

உளுந்து சார்ந்த உணவுகள் உடலுக்குப் பெரும் வலிமையை அளிக்கும்.

இந்த நிலையில் எதைச் சாப்பிட்டாலும் மெலிந்தே இருப்பவர்கள், உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணத்தை மருத்துவரிடம் அறிந்து உறுதிப்படுத்திக்கொள்வதும் அவசியம். உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்துவிட்டு திடீரென உடல் எடை குறைகிறதெனில் காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் பார்ப்பது முக்கியம். A slim body need not be feared

தைராய்டு சார்ந்த சிக்கல் இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் எடையைக் கூட்டுவதிலோ, குறைப்பதிலோ குறுக்கு வழி மட்டும் வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share