ஆ.ராசா கலந்து கொண்ட நிகழ்ச்சி… பேராசிரியர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!

Published On:

| By Selvam

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ரேவதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 31) தீர்ப்பளித்துள்ளது. a raja mp event

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ‘சொல்’ ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்று உரையாற்றியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக இருந்த பேராசிரியர் ரேவதி, கல்லூரி நிர்வாகத்தால் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம் கண்டனம் தெரிவித்தது. மேலும், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி மனுத்தாக்கல் செய்தார். a raja mp event

ADVERTISEMENT

அதில், “நிகழ்ச்சி நடத்த கல்லூரி அனுமதி அளித்த பின்னரே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக தவறான காரணத்தைக்கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். எனவே சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “பேராசிரியர் ரேவதி சஸ்பெண்ட் செய்யப்பட்டது உச்சபட்ச நடவடிக்கை. அதனை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பவானி சுப்பராயன், ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார். a raja mp event

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share