கமலாலயத்தை கிராஸ் செய்த ஆ.ராசா கார்… என்ன நடந்துச்சு தெரியுமா?

Published On:

| By Selvam

நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் கார் கமலாலயத்தை கடந்தபோது அங்கிருந்தவர்கள் “பாரத் மாதா கீ ஜெய்” என்று கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நேற்று (மார்ச் 20) வெளியிட்டார். இந்த தேர்தலில் தற்போதைய 10 எம்.பி-க்களும், 11 புதிய முகங்களும் களமிறங்குகின்றனர்.

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அனைத்துக் கூட்டணி கட்சி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார் ஆ.ராசா.

அந்தவகையில், நேற்று  சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்திக்க ஆ.ராசா தனது காரில் சென்றுள்ளார்.

அப்போது பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வழியாக ஆ.ராசாவின் கார் சென்ற போது, கூட்ட நெரிசலால்  சற்று மெதுவாகவே நகர்ந்தது கார்.

காருக்குள் ஆ.ராசாவை பார்த்த பாஜகவினர் , “பாரத் மாதா கீ ஜெய்…பாரத் மாதா கீ ஜெய்” என்று கோஷமிட்டுள்ளனர். உடனே ஆ.ராசா தனது கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, “தமிழர்கள் நாமும் வாழ்வோம்…  பாரதமும் வாழட்டும்” என்று அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென்று ஆ.ராசா அருகே வந்து,  ‘உங்க கருத்து புடிக்காது…ஆனா உங்க பேச்சு புடிக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதை ரசித்த ஆ.ராசா அவரை பார்த்து சிரிக்க… கார் மெல்ல நகர்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லையில் நயினார் நாகேந்திரன்: வேட்பாளர் பட்டியல் மாற்றம்!

தென் சென்னை தமிழிசை, கோவை அண்ணாமலை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share