500 ரூபாய் நோட்டு குவியலில் படுத்து தூங்கிய அரசியல்வாதி: யார் இவர்?

Published On:

| By Selvam

அசாம் மாநிலம், உடல்கிரி மாவட்டம், பாய்ராகுரி கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்த பெஞ்சமின் பாசுமதாரியின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகைப்படத்தில், அவர் தன் உடல் மீது 500 ரூபாய் நோட்டுகளை பரப்பி, கட்டிலில் கண்களை மூடி படுத்திருக்கிறார். அவரை சுற்றியும் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த புகைப்படம் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

போடோலேண்டை தலைமையிடமாகக் கொண்ட ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யு.பி.பி.எல்) கட்சியைச் சேர்ந்தவர் இவர் என்பதால், கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, யு.பி.பி.எல் தலைவரும், போடோலேண்ட் பிராந்திய கவுன்சிலின் (பி.டி.சி) தலைமை நிர்வாக உறுப்பினருமான பிரமோத் போரோ தற்போது விளக்கமளித்தார்.

“பாசுமதாரியை கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதியே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவருக்கும் கட்சிக்கும் இப்போது தொடர்பு இல்லை. போடோலேண்ட் பிராந்திய கவுன்சில் அரசாங்கம் அவரை கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து கடந்த பிப்ரவரி 10-ம் தேதி நீக்கியது. எனவே, அவரது தனிப்பட்ட செயல்களுக்கு கட்சி எந்த வகையிலும் பொறுப்பேற்காது” என்று பிரமோத் போரோ தெரிவித்தார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மற்றும் ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடு வழக்கில் பாசுமதாரி மீது குற்றம் சாட்டப்பட்டு நிலையில் ஏழை பயனாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்ற பணமே இவை என்று கூறப்படுகிறது.  இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் கட்சியையும் அவரையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: கோடையில் மேக்கப் கலையாமல் இருக்க…

கிச்சன் கீர்த்தனா: ஃபிரெஷ் கோஸ் சாலட்

அந்த புண்ணியவானுக்கு போன் போட்ட புண்ணியவான்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share