வருகிறது Whatsapp-ன் புதிய அப்டேட் !

Published On:

| By Jegadeesh

உலகம் முழுவதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் பயனர்களை கவரும்படி அடிக்கடி அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், குரூப் வீடியோ கால் பேசும் வசதி, அதில் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் மியூட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருந்தது.

ADVERTISEMENT

அதேபோல சமீபத்தில் பயனர்களால் அனுப்பப்படும் தவறான மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த போவதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில் ஸ்டேட்டஸ் பிரிவில் அப்டேட்டை வெளியிட உள்ளது. அந்த வகையில் Whatsapp status-களில் வைக்கப்படும் போட்டோக்கள், வீடியோ உள்ளிட்ட உள்ளடக்கங்கள் சென்சிட்டிவாக இருக்கும் பட்சத்தில் அதனை பயனர்கள் ரிப்போர்ட் செய்யும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
A new update of Whatsapp is coming

வாட்ஸ் அப்பின் இந்த ரிப்போர்டிங் சேவை தற்போது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன்  சோதனையாளர்களுக்கு வழங்கி  வருகிறது. இதன்மூலம் வெறுப்புகளை பரப்பும்படியான ஸ்டேட்டஸ் வைப்பது தடுக்கப்படும் மேலும் இந்த சேவை அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் விரைவில் வழக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

ரூ.100 கோடி வசூல் செய்த ‘வாத்தி’: நன்றி சொன்ன தனுஷ்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆர்.என்.ரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share