தென்மேற்கு வங்க கடலில் ஜனவரி 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத்தொடர்ந்து உருவான டிட்வா புயல் கடலோர பகுதிகளில் பயணித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவாக மழை பெய்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதி சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது. லட்சத்தீவு – குமரிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் நேற்றுமுதல் தமிழகம், புதுவையில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழகம் மன்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் வரும் ஜனவரி 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் வாய்ப்பு குறைவு என்றும் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
