இன்று (மே 12) உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் “ ஒரு தாயின் பாசம் எப்படி இந்த உலகத்தை மாற்றி அமைத்தது “ என்று ஒரு குட்டி கதை ஒன்றை பார்க்கலாம்.
இக்கதை “ ஒரு உண்மை சம்பவம்” ஆகும்.
ஒரு நாள் மாணவன் ஒருவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது கையில் ஒரு கடிதம் ஒன்றை கொண்டு வந்தான்.
அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று படித்த அவன் அன்னையின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அதை கண்ட அச்சிறுவன் அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று அன்னையிடம் கேட்க, அவரோ அதில் “ உங்கள் மகன் மிகவும் ஆற்றல் மிக்கவன், அவனுக்கு சொல்லித்தரும் அளவுக்கு ஆற்றல் மிக்க ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் இல்லை. அதனால் அவனை வேறு ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விடுங்கள்” என்று எழுதியுள்ளது என்று கூறினார்.
பின்னாட்களில் அந்த சிறுவன் ஒரு உலகம் போற்றும் விஞ்ஞானியானான்!
ஒரு நாள் அவன் அன்னை மறைவுக்கு பின் அவனிடம் அந்த பள்ளியின் கடிதம் கிடைத்தது,
இந்த முறை அதை படித்த அவன் கதறி அழுதான்!
ஏனெனில் அந்த கடிதத்தில் எழுதியிருந்தது என்ன வென்றால் “ உங்கள் மகனுக்கு மூளை வளர்ச்சி இல்லாத காரணத்தால் அவனை எங்கள் பள்ளியில் தொடர அனுமதிக்க மாட்டோம் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை, அவர்தான் இன்று உலகம் போற்றும் “ தாமஸ் ஆல்வா எடிசன் ”. மின்சார பல்பை 1879-ல் கண்டுபிடித்து உலகிற்கே ஒளியூட்டியவர்.
இக்கதையின் வழியாக எப்படி ஒரு அன்னையின் பாசம் இவ்வுலகை மாற்றியது என்பதை உணர முடியும்.
அம்மா எனும் மந்திரம் இவ்வுலகையே மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது… அவளின் அன்போ கள்ளம் கபடமற்றது…
கணேஷ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்னது டீக்கு சம்மர் ஸ்பெஷல் ஆஃபரா? அப்டேட் குமாரு
“நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை” – ராகுல்
அங்கே அல்லு அர்ஜூன்… இங்கே ராம் சரண்… ஆந்திராவில் புயல் கிளப்பிய பிரச்சாரம்!