ADVERTISEMENT

மலாக்கா ஜலசந்தியில் உருவானது ‘சென்யார்’ புயல்!

Published On:

| By Mathi

Cyclone Senyar

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதியில் மலாக்கா ஜலசந்தியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி தற்போது ‘சென்யார்’ புயலாக வலுவடைந்துள்ளது.

ADVERTISEMENT

மலாக்கா ஜலசந்திப் பகுதியில் வலுவடைந்துள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து இலங்கைக்குள் செல்லக் கூடும் என முன்னர் கூறப்பட்டது. இப்புயலுக்கு ‘சென்யார்’ என ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்தன.

ADVERTISEMENT

இந்த ‘சென்யார்’ புயல், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தோனேசியாவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மாற்றங்களால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது; மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது, ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share