ADVERTISEMENT

தமிழகப் பொருளாதார வளர்ச்சி – ஒரு பார்வை!

Published On:

| By Minnambalam Desk

Tamil Nadus economic development

பாலசுப்ரமணியம் முத்துசாமி Tamil Nadus economic development

அண்மையில் ஒன்றிய அரசு, 2024-25 ஆண்டுக்கான இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகளை வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு 9.63% சதவீத வளர்ச்சியை அடைந்து, இந்திய மாநிலங்களிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உயர்ந்திருப்பதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. Tamil Nadus economic development

கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாடு அடைந்துள்ள மிக அதிக சதவீத பொருளாதார வளர்ச்சி இதுவே. தமிழகப் பொருளாதார அமைப்பின் தனித்துவம் என்னவெனில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் துறைகளாக சேவை மற்றும் தொழில்துறை வளர்ந்திருப்பதுதான். இந்திய மாநிலங்களில், தமிழகத்தில் தொழில்துறையின் பங்கு மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. Tamil Nadus economic development

ADVERTISEMENT
 Tamil Nadus economic development

Tamil Nadus economic development

தொழில்துறையில் மின் வாகனங்கள், காலணி உற்பத்தி, அறைக்கலன் உற்பத்தி, செமி கண்டெக்டர் உற்பத்தி போன்ற துறைகளில் பெரும் முதலீடுகள் கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளன. இவற்றின் விளைவுகள், தொழில் துறையில் தொடர் உயர் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் சாத்தியங்கள் உண்டு. தொடர்ச்சியாக மரபுசாரா மின் உற்பத்தித் திட்டங்களில் முதலீடுகள் வரவுள்ளன எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. Tamil Nadus economic development

ADVERTISEMENT

சேவைத்துறையில், மதிப்புக் கூட்டுத் தளத்தில், உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCC) நிறுவிட, தமிழ்நாடு அரசு பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், மென் பொருள் துறை தொடர்பான முதலீடுகள் தமிழ்நாட்டில் பரவலாக அமையுமாறு, கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. Tamil Nadus economic development

இவை தவிர, புத்தாக்கத் துறையில், தமிழ்நாடு புத்தாக்க நிறுவனம் (Start Up TN) மிக வேகமாக இயங்கி, புதிய தொழில்களை, புத்தாக்கத் தொழில்களை ஊக்குவித்து வருகிறது.

ADVERTISEMENT

தொழில்துறையிலும், சேவைத் துறையிலும் இது போன்ற தொடர் முதலீடுகளாலும், புத்தாக்கங்களாலும், உற்பத்தித் திறன் அதிகரித்து, வருங்காலத்தில் தொடர்ந்து பொருளாதாரம் வளரும் வழிகளை அரசு மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அவை வெற்றி பெறும் சாத்தியங்களும் உள்ளன.

உண்மையான நிலை! Tamil Nadus economic development

தமிழ்நாட்டின் இந்த வெற்றிச் செய்தியில், ஒரு துறை மிகவும் மோசமாக இயங்கி வருவது மறைந்துள்ளது. முதன்மைப் பொருளாதாரமாக வேளாண்மை 0.15% மட்டுமே வளர்ந்துள்ளது என்னும் செய்திதான் அது. அதிலும் பயிர்த் தொழில் -5.93 ஆக குறைந்துள்ளது. உண்மையான நிலைமை இன்னும் மோசமாக இருக்கக் கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். Tamil Nadus economic development

Tamil Nadus economic development

Tamil Nadus economic development

தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, கூடுதல் மானியங்கள், உதவிகள் என முதலீடு செய்து வருகிறார்கள். சென்ற ஆண்டு 42 ஆயிரம் கோடி ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது (மொத்த பட்ஜெட்டில் 14%) ஆனால், இத்தகைய முதலீடுகளுக்குப் பின்னும், வளர்ச்சி குன்றியுள்ளது என்னும் தரவு நமக்குக் காட்டித்தரும் உண்மை ஒன்றுதான். வேளாண்மையில் அரசு செய்யும் முதலீட்டுக்கு தகுந்த பலன் கிடைப்பதில்லை. கிடைக்கப் போவதுமில்லை என்பதுதான் அது.

ஒரு முதலீட்டாளராக இதை அணுகிப் பார்த்தால், நமக்கு தீர்வுகள் புலப்படும். முதலீட்டுக்குச் சரியான வருமானம் கிடைக்கவில்லையெனில், அந்த முதலீட்டைக் கைவிடுவது ஒரு வழி. அந்த வழியில் பார்த்தால், தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறைக்கான செலவினத்தை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே போவதுதான் வழி.

ஆனால், முதன்மைப் பொருளாதாரமான வேளாண்மையை அப்படி ஒரு அரசு கைவிட்டு விட முடியாது. உணவு இறையாண்மை என்பது நாட்டின் இறையாண்மையின் ஒரு பகுதி.  அதை எந்த மாநிலமும், நாடும் கைவிட்டு விட முடியாது. அப்படிக் கைவிட்டால் அது, நீண்ட கால நோக்கில் நாட்டின் சமூக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக முடியும்.  உலகின் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தியா ஒரு போதும் உணவு உற்பத்தியைக் கைவிட முடியாது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் வழமையான அணுகுமுறை வழியே தீர்வு எட்டப்பட வில்லையெனில், புத்தாக்க வழிகளை நாம் யோசிக்கத் தொடங்க வேண்டும். இதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு – வெண்மைப் புரட்சி. 1964 ஆம் ஆண்டு, அமுல் மாதிரி பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனத்தை நாடெங்கும் உருவாக்குமாறு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அமுல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குரியனைக் கேட்டுக் கொண்டார். Tamil Nadus economic development

அப்படி ஒரு திட்டத்தை நாடெங்கும் எடுத்துச் செல்ல, அரசிடம் அன்று போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை. திட்டத்தை நிறைவேற்ற போதுமான ஒத்துழைப்பும், உற்சாகமும் அரசு அதிகாரிகளிடம் இல்லை. அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் பால் உற்பத்தி மிக அதிகமாகி, பால் பொருட்கள் விற்காமல் தேங்கிப் போயின. வேறு வழியின்றி, ஐரோப்பிய நாடுகள், பால் பொருட்களைக் கொள்முதல் செய்து கடலில் கொட்ட இருந்தார்கள். அந்த உபரியை, டாக்டர் குரியன் இலவசமாகப் பெற்று, இந்தியா கொண்டு வந்து, அதை சந்தையில் விற்று, அதில் கிடைத்த நிதியில் நாடெங்கும் பால் உற்பத்திக் கூட்டுறவுகளை வெற்றிகரமாக உருவாக்கினார். அவற்றின் வெற்றியைக் கண்ட இந்திய அரசு கூடுதல் நிதி உதவி அளிக்க, இந்தியா உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக உருவெடுத்தது. புத்தாக்க அணுகுமுறைக்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

எனது நண்பர் வெங்கி கென்யாவில் பணிபுரிந்து வருபவர். அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் இருந்தது. அதற்கான மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தார். நண்பர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியே, மாற்று உணவு முறையான பேலியோ உணவு முறையைக் கேள்விப்பட்டார். அதன் மூலம், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை மேலான வகையில் எதிர்கொள்ள முடியும் எனப் புரிந்து கொண்டு, அந்த உணவு முறையை கையாள முடிவெடுத்தார்.

Tamil Nadus economic development

Tamil Nadus economic development

கோவையில் அலோபதி மருத்துவர் இரவீந்திரன் என்பவர் இது போன்ற ஒரு முயற்சிக்கு ஆலோசனைகள் சொல்கிறார் எனக் கேள்விப்பட்டு அவரை அணுகினார் வெங்கி. அவரது மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அவருக்கெனவே தனித்துவமான ஒரு உணவு முறையை (Diet) பரிந்துரைத்தார் மருத்துவர் ரவீந்திரன். வழமையான உணவு முறைக்கு முற்றிலும் மாறுதலான ஒரு உணவு முறை. வெங்கி தீவிரமான மனக்கட்டுப்பாடு உடையவர். மருத்துவர் இரவீந்திரன் பரிந்துரைத்த மாற்று உணவு முறையை கச்சிதமாகப் பின்பற்றினார்.

சில மாதங்களிலேயே அவரது உடல் எடை வெகுவாகக் குறைந்து, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான மருந்துகளை நிறுத்திவிட்டார். இன்று அவர் புதிய உணவு முறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அவரைப் போல மிகச் சரியாக, அறிவியல் வழியில் பேலியோ உணவு முறையை பின்பற்றி பல ஆயிரம் பேர் பயன் பெற்றனர். தமிழ்ச் சமூகத்தில் தன்னெழுச்சியாக எழுந்த ஒரு இயக்கம், ‘பேலியோ உணவு’, இயக்கம். Tamil Nadus economic development

இன்று பேலியோ உணவு முறை என்பது பெரிதும் பேசப்படா விட்டாலும், உணவில் மாவுச் சத்தைக் குறைத்து, புரதம் மற்றும் கொழுப்பு உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் விழிப்புணர்வை அது பரவலாக உருவாக்கியுள்ளது. இதில், அரசின் சுகாதாரத் துறைக்கும், மாநில திட்டக் கமிஷனுக்கும், பொதுநலத் திட்ட உருவாக்குனர்களுக்கும் பல படிப்பினைகள் உள்ளன.

விடுதலை பெற்ற காலத்தில், இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின் தங்கி இருந்தது. மக்களுக்கு அடிப்படை உணவே இல்லாத போது முழுமையான ஊட்டச்சத்து கொண்ட உணவைப் பற்றி பேச, திட்டமிட அப்போது அவகாசமில்லை. போர்க்கால அடிப்படையில், இந்திய அரசு உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கியது. இந்தியா / தமிழ்நாட்டில், வேளாண் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள் அதற்காகவே உருவாக்கப்பட்டன. 25 ஆண்டுகளில், உணவுத் தன்னிறைவை அடைந்த இந்தியா, இன்று உலகின் இரண்டாவது பெரிய உணவு தானிய உற்பத்தியாளராக உயர்ந்திருக்கிறது.

ஆனால், வெறும் உணவு தானியத்தை மட்டுமே பெரும்பாலும் உண்பது பெரும் ஊட்டச் சத்துக் குறைபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது. மிக அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், சென்னையில் ஊட்டச்சத்துக் குறைவால் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 16-18% என்பது தெரியவந்துள்ளது.

(Malnutrition among under-five children, Chennai, Tamilnadu, India, 2024 | Infectious Diseases Conferences 2025 | Infection Conferences 2025 | Vaccines Conferences 2025 | Noninfectious Diseases Events | Covid-19 Conferences). Tamil Nadus economic development

Tamil Nadus economic development

Tamil Nadus economic development

இதற்கு முக்கிய காரணம், நம் உணவு பொருளாதாரம்தான். புரதம், கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் ஏழைகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் கிடைப்பதில்லை என்பதே. தமிழ்நாட்டில் 90% அதிகமான மக்கள் இறைச்சி உண்பவர்கள் என்றாலும், போதுமான அளவு உண்பதில்லை என்பதும் பெரும் குறைபாடாகும்.

8 கோடி மக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உற்பத்தி செய்வது என்னும் குறிக்கோளில் இருந்தது பின்னோக்கித் திட்டமிட்டால், நாம், உணவு தானிய உற்பத்தியைத் தாண்டி, பெருமளவு முட்டை, இறைச்சி முதலியவற்றை உற்பத்தி செய்ய வேண்டும் என்னும் குறிக்கோள் மிக இயல்பாகவே துலங்கி வரும்.

ஆனால், தமிழ்நாட்டில் உணவு தானியமே பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இது உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான ஒரு தொழிலல்ல. இறைச்சி உற்பத்தி, உணவு தானிய உற்பத்தியை விட லாபகரமானது. எனவே, உழவர்கள் பெருமளவில் இறைச்சி, முட்டை போன்றவற்றை உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் வேளாண் பொதுநலத் திட்டங்கள், உருவாக்கப்பட வேண்டும்.

இறைச்சி போன்ற தொழில்களில் உற்பத்தியாளர்கள் ஈடுபடுகையில், அவை உற்பத்தியாளர்களுக்கு லாபகரமாக விளங்கும் வகையில் பொதுநலத் திட்ட அணுகுமுறை இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி உற்பத்தியாளர் நலம் பேணும் வணிக நிறுவனங்களை மாநில அளவில் உருவாக்க வேண்டியதுதான்.

ஆனால், அதை இப்போதைய வேளாண் துறை, வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்னும் அரசுத் துறை அமைப்புகளால் ஒருபோதும் உருவாக்க முடியாது. அத்துறைகள், கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் ஆராய்ச்சி நிலையங்கள் என்றுதான் யோசிக்கும்.  கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் அரசுகளின் இந்த அணுகுமுறை வேளாண்மையை லாபகரமாக மாற்ற வில்லை என்பது கசப்பான உண்மை.

எனவே, இங்கே ஒரு மாற்று அணுகுமுறை, மிஷனரி போன்ற செயல்பாடு (Missionary Mode) தேவைப்படுகிறது. Tamil Nadus economic development

84 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி, இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லும் கனவை முன் வைத்தார். அந்த நோக்கம் வெற்றி பெற, வினையூக்கியாக தொழில்நுட்ப மிஷன்கள் (Technology Missions) தொடங்கப்பட்டன. சாம் பிட்ரோடா என்னும் தொழில் நுட்பரின் தலைமையில், பெரும் நோய்களுக்கான தடுப்பூசிகள், தொலைத்தொடர்பு, குடிநீர், அனைவருக்குமான கல்வி, பால், எண்ணெய் வித்துக்கள் என முக்கியமான துறைகளில் தொழில்நுட்ப மிஷன்கள் (Technology Missions) தொடங்கப்பட்டன. T

Tamil Nadus economic development சாம் பிட்ரோடா
சாம் பிட்ரோடா

இந்த தொழில்நுட்ப மிஷன்கள், அரசு இயந்திரங்கள் வழமையாக இயங்கும் முறைக்கு வெளியே உருவானவை. இவற்றை நிறைவேற்ற, ஏற்கனவே வெற்றி பெற்ற நிறுவனங்கள், தலைவர்களின் தலைமையில், முற்றிலும் புதிய அணுகுமுறையில் இவை இயங்கத் தேவையான தன்னாட்சி அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டன.

இதன் விளைவாக இந்தியாவில் போலியோ போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன.  80% சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து வந்த இந்தியா நான்கே ஆண்டுகளில் இறக்குமதியை நிறுத்தி, தற்சார்பை அடைந்தது. இந்தியா உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக உயர்ந்தது. இந்தியாவின் அடிப்படைக் கல்வியறிவு பெருமளவு உயர்ந்தது. தொலைத்தொடர்பில் பெரும் பாய்ச்சலை கண்டது.

இன்று இது போன்ற அணுகுமுறையில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்னும் முதலீட்டு முன்னெடுப்பு மிக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே முன்னோடித்திட்டமாக, சமூக நீதி அடிப்படையில் முதலீடுகளை இந்த நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. ஆனால், இது ஒரு சிறு அலகு முயற்சிதான். சில நூறு தொழில்முனைவோர்களை இது வெற்றிகரமாக உருவாக்கும்.

ஆனால், தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்துக்கு, இது போதாது. தமிழ்நாட்டில் 70-80 லட்சம் நில உடமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மிகக் குறுகிய நிலங்களை வைத்திருப்பவர்கள். அவர்கள் அனைவராலும் ஸ்டார்ட் அப் போன்ற நிறுவனங்களில் முதலீடுகளைப் பெற்று பெரும் வணிக நிறுவனங்களை உருவாக்க முடியாது. 75-80 லட்சம் பெரும் தனியார் நிறுவனங்கள் வெற்றிகரமாக உருவாவதும் சாத்தியமில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில்,  காவிரி பாயும் மாவட்டங்கள் இணைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என ஒரு பிராந்தியம் உருவாக்கப்பட்டது. ஆனால், அங்குள்ள நெல் உற்பத்தியாளர்களின் வருமானம் உயரும் வண்ணம் எத்திட்டமும் உருவாக்கப்படவில்லை.  பேரு வெச்சியே, சோறு வெச்சியா என்பது போன்ற அவல நகைச்சுவைதான் இது.

Tamil Nadus economic development

Tamil Nadus economic development

டெல்டா உழவர்களை இணைத்து, ஆவின் போல, உற்பத்தியாளர் நலன் நாடும் பெரும் வணிக நிறுவனத்தை உருவாக்கி, அவர்கள் இறைச்சி உற்பத்தி போன்ற மதிப்புக் கூட்டு உற்பத்தியில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும். அதற்கு ஒரு தொழில்நுட்ப மிஷன் போன்ற அரசுக்கு வெளியேயான ஒரு தன்னாட்சி பெற்ற வணிக நிறுவனத்தை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு நிறுவனத்தை முன்னின்று நடத்த தொழில்முறை நிபுணர்களை நியமித்து, அவருக்கான சுதந்திரத்தை கொடுத்து முன்னெடுக்க வேண்டும்.  இது போன்ற முயற்சிகளில், அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க, இத்தகைய திட்டங்கள், அனைத்துக் கட்சியினர் மற்றும் உழவர்களின் பங்கேற்போடு உருவாக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக கொள்முதல் விலை, விற்பனை போன்றவற்றை அரசியல் கட்சிகள் தீர்மானிக்கக் கூடாது.

டென்மார்க் நாட்டில், பன்றி இறைச்சி பதனப்படுத்தும் தொழிற்சாலை கூட்டுறவு உருவாக்கப்பட்டு, உலகிலேயே பெரிய பன்றி இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக அது உருவானது அப்படித்தான். அப்படி ஒரு இறைச்சி உற்பத்தி மண்டலமாக காவிரி டெல்டா உருவானால், டெல்டா விவசாயிகளின் வருமானம் உயரும்.

இத்துடன், குஜராத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் சூரிய ஒளி உற்பத்தி கூட்டுறவுகளை, காவிரி டெல்டாவில் நிறுவி, உழவர்கள், மின் விநியோகக் கட்டமைப்புக்கு மின்சாரம் சப்ளை செய்யும் வகையில் ஒரு மின் கட்டமைப்பை உருவாக்கலாம். அங்கே தொழிற்சாலைகள் இல்லையாதலால், வேளாண்மைக்கென ஒரு தனிக்கட்டமைப்பை  உருவாக்குவது எளிது. இதனால், ஒவ்வொரு உழவரும் வருடம் 40-50 ஆயிரம் ருபாய் கூடுதல் வருமானம் பெற முடியும். Tamil Nadus economic development

நெல் உற்பத்தியைத் தாண்டி, இறைச்சி உற்பத்தி, சூரிய ஒளி மின்சார உற்பத்தி போன்ற வழிகளில், உழவர்களுக்கு கூடுதல் வருமானத்தை நிலையாக ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகளை அரசு பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இன்று அரசு வழங்கிக் கொண்டிருக்கும் மானியங்களில் ஒரு சிறிய பங்குதான் இந்த முயற்சிகளுக்குத் தேவைப்படும். Tamil Nadus economic development

கட்டுக்கடங்காத காவிரியின் குறுக்கே ஒரு அணை கட்டி, விளை நிலம் பெருக்கியதன் விளைவுதான் 700 ஆண்டுகள் நிலைத்த சோழ சாம்ராஜ்யம். அந்த சோழ மண்டலம், இன்று பொருளாதார வளர்ச்சியின்றி பின் தங்கியுள்ளது. அதை மீட்டெடுத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமை அரசுக்கு உள்ளது. ஒரு டெல்டாக்காரராக அதை செய்து முடித்தால், ஸ்டாலின் அவர்களை சரித்திரம் நன்றியோடு கொண்டாடும்.  

இது முடியுமா என ஒரு கேள்வி எழலாம். கடந்த 4 ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடந்து வரும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்னும் தன்னாட்சி நிறுவனமே இதற்கான உதாரணம். Tamil Nadus economic development

கட்டுரையாளார் குறிப்பு:

பாலசுப்ரமணியம் முத்துசாமி 

Tamil Nadus economic development  Balasubramaniam Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share