முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி : சிறை வாசலில் செந்தில் பாலாஜி பேட்டி!

Published On:

| By Kavi

சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் அவரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

பின்னர் சட்ட ரீதியான சிறை நிர்வாக நடைமுறையை தொடர்ந்து இன்று மாலை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

அவரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து வரவேற்றார். தொண்டர்கள் செந்தில் பாலாஜியை சூழ்ந்துகொண்டு, கோஷமிட்டனர்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, “என்மீது அன்பும் பாசமும் கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றியை சமர்ப்பிக்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு போட்டார்கள். அதை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு மீண்டு வருவேன்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

பிரியா

471 நாட்களுக்கு பிறகு… ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியை வரவேற்க காத்திருக்கும் திமுகவினர்… போக்குவரத்து ஸ்தம்பித்தது!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share