கொடுங்கையூர் பெண் படுகொலை… 25 பவுன் நகைகள் கொள்ளை… கைதான மருத்துவரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

Published On:

| By christopher

A doctor behind Kodungaiyur woman murder...

சென்னை கொடுங்கையூர் இளம்பெண் நித்யா கொலை வழக்கில் கைதான மருத்துவர் சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலம பலரையும் திடுக்கிட செய்துள்ளது. A doctor behind Kodungaiyur woman murder…

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த தம்பதியர் பாஸ்கர்- வரலட்சுமி. இவர்களின் நித்யா (வயது 26) சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ADVERTISEMENT

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நித்யா, பெற்றோருடன் தங்கவில்லை. மாறாக தனது காதலர் பாலமுருகனுடன் (வயது 28) கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலணி 5வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து லிவிங் டுகிதராக வசித்து வந்தார். பாலமுருகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு தற்போது வேலை தேடி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி மதியம், ‘எனது பெற்றோர் வருகிறார்கள். எனவே நீ வீட்டில் இருக்க வேண்டாம் என நித்யா பாலமுருகனிடம் கூறியுள்ளாராம். அதன்படி அவரும் வெளியே சென்றுவிட்டு மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

ADVERTISEMENT

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடக்க, உள்ளே படுக்கையில் மயங்கிய நிலையில் நித்யா இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு பதறிய பாலமுருகன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின்படி கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் சென்று பார்த்த போது நித்யா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோர் புகார்!

இதற்கிடையே நித்யாவின் பெற்றோர் வரவழைத்து போலீசார் விசாரித்தபோது, நித்யா லிவிங் டுகெதரில் வாழ்வது தங்களுக்கு தெரியாது என்றும், அவரிடம் 25 பவுன் நகைகள் இருந்தது. அதை பாலமுருகன் திருடிவிட்டு மகளை கொன்றிருக்கலாம் என்றும் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில் பாலமுருகனிடம் நடத்திய விசாரணையில், நித்யாவின் பெற்றோர் அடிக்கடி பணம் கேட்டு நித்யாவை தொல்லை கொடுத்து வந்தனர் என்றும், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அம்பத்தூரில் தங்கியிருந்த போது, நித்யாவுடன் தாலி கட்டி ஒன்றாக வசித்ததாகவும், வேலைக்கு செல்லும் போது தாலியை கழற்றி வைத்துவிட்டு பணிக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நித்யாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, கடைசியாக பேசியவரை தொடர்புகொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளனர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

நித்யா கடைசியாக போனில் தொடர்பு கொண்ட நபர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த 27 வயதான மருத்துவர் சந்தோஷ் குமார் என போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.

மதுவில் தூக்க மாத்திரை!

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “நித்யா என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி இதுவரை 8.5 லட்சம் ரூபாய் பறித்துவிட்டார். இதனால் கடந்த 6ஆம் தேதி நித்யாவின் வீட்டிற்கு சென்றேன். அங்கு இருவரும் மது அருந்தினோம். அப்போது 2 விதமான தூக்க மாத்திரைகளில் 5 மாத்திரைகளை மதுவில் கலந்து நித்யாவிடம் கொடுத்தேன். அதை குடித்து நித்யா மயங்கியதும், அவர் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டேன். அதனை எனது எதிர்வீட்டில் இருக்கும் நண்பர் முஜிபுர் பாஷாவிடம் கொடுத்து வைத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தோஷ் குமாருடன், முஜிபுரையும் கைது செய்த போலீஸார், அவர் மறைத்து வைத்திருந்த 25 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பலரை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி, பின்னர் கொலை செய்யப்பட்டுள்ள நித்யாவின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share