சென்னையில் அடுக்குமாடி மேற்கூரையில் தவறி விழுந்த குழந்தையை மீட்க அங்கு குடியிருப்பவர்கள் ஒன்றுகூடி போராடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சன்ஷெட் எனப்படும் மேற்கூரையில் 10 மாத குழந்தை ஒன்று தவறி விழுந்தது.
சன்ஷேட் கூரையில் இருந்து நகர்ந்து நகர்ந்து கீழே விழவிருந்த குழந்தையை மீட்பதற்காக அங்கு வசித்தவர்கள் ஒன்று கூடினர்.
முதலில் தரைதளத்தில் பெரிய பெட்ஷீட்டை சிலர் நீட்டிபிடித்து நின்றுகொண்டிருந்தனர். குழந்தை கீழே விழும்போது அதை பிடித்துகொள்ளும் வகையில் கூடியிருந்தனர்.
இதனிடையே குழந்தை மேற் கூரையில் இருந்து நகர்ந்து நகர்ந்து நுனிக்கு வந்த காட்சி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு திக் திக் நிமிடங்களாக இருந்தது.
Today morning in my cousins apartment in Chennai 😱 pic.twitter.com/VAqwd0bm4d
— 🖤RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு) (@RengarajMr) April 28, 2024
தொடர்ந்து மேல்தளத்தில் இருந்து ஜன்னலுக்கு வெளியே ஒருவர் வந்து சுவற்றில் நின்றுகொண்டிருக்க, அங்கு வசிக்கக் கூடிய ஹரி என்ற இளைஞர் ஜன்னல் மேல் ஏறி நின்று குழந்தையை பத்திரமாக மீட்டார்.
முதலில் அந்த குழந்தை யாருடையது என்பது தெரியவராத நிலையில் தற்போது அது, அங்கு வசிக்கும் வெங்கடேஷ் – ரம்யா தம்பதியினரின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது.
தாய் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பால்கனியில் இருந்த மாப் எடுத்தபோது தவறுதலாக விட்டுவிட்டதாகவும், உடனே குழந்தையை காப்பாற்ற கூச்சலிட்டதும் அனைவரும் ஒன்றுகூடி 7 நிமிடத்தில் காப்பாற்றிவிட்டதாகவும் அங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
தற்போது குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
