தமிழகத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 5-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற உள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், மக்களிடையே பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
