இயற்கை துணிகள், பிரகாசமான வண்ணங்கள் ஆகியவற்றின் வசதியையும் எளிமையையும் வெளிப்படுத்தும் ஓர் எளிய வழி போஹேமியன் பாணி. கடந்த காலத்தில் மக்களின் ஃபேஷன் உணர்வை பாதித்த இந்த பாணி, இன்றைய தலைமுறையை மிகவும் ஆட்கொண்டுள்ளது.
அந்த வகையில் சமூகத்தின் வலுவான உணர்வை வளர்க்கும் போஹோ ஸ்டைல் நகைகள் தனித்துவமானது, சிறந்தது என்று சொல்லலாம். நீங்கள் ஒரு ஜோடி வண்ணமயமான இறகு காதணிகளை அணியும்போது சுதந்திர பறவையாக உணர்வீர்கள்.
போஹேமியன் நகைகள் பொதுவாக இறகுகள், மணிகள், கற்கள் மற்றும் தோல் போன்ற இயற்கைப் பொருட்களையும், சிக்கலான வடிவமைப்புகளையும் துடிப்பான வண்ணங்களையும் கொண்டுள்ளது.
கழுத்தணிகள், காதணிகள், வளையல்கள், மோதிரங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இதைக் காணலாம். தனித்துவமான மற்றும் தனிப்பட்ட தோற்றத்தை உருவாக்க பல்வேறு துண்டுகளை கலந்து உருவாக்கும் இந்த அணிகலன்கள், உங்களைத் தனித்துவமாகக் காட்டும் என்பது நிச்சயம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேப்பை தேன்குழல்
பிரச்சனைகள் பலவிதம் அதில் இது தனி ரகம் – அப்டேட் குமாரு