நாமக்கல் : பாதாள சாக்கடைக்காக தோண்டிய குழியில் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

நாமக்கல்லில் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாதாள சாக்கடை அமைக்கும் குழியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 ஆவது வார்டு சின்ன முதலைப்பட்டி கடக்கால் வீதியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனால் நேற்று புத்தாண்டு என்பதால் அங்கு பணிகள நடைபெறவில்லை. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் – ரதி பிரியா தம்பதியன் மகன் ரோகித் நேற்று விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை குழியில் விழுந்து விட்டான்.

ADVERTISEMENT

சிறுவன் திடீரென மாயமானதால் அப்குதியில் உள்ள இடங்களில் தேடி சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்த பாதாள சாக்கடை குழியில் சிறுவன் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இப்பணியை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் ரூ. 20 லட்சம் நிவாரண தொகையாக நேற்று இரவு ரோகித்தின் பெற்றோரிடம் வழங்கி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share