பால் பொருட்களுக்குப் பெருகும் தேவை!

Published On:

| By Balaji

இந்தியாவில் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த பால் வளச் சந்தையில் அவற்றின் பங்கு உயர்ந்துள்ளது.

2016-17ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 165.4 மில்லியன் டன் அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 176.35 மில்லியன் டன்னாக உயர்ந்தது. மேலும், 2021-22ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 254.5 மில்லியன் டன்னாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும். *ரெபோபேங்க்* ஆய்வின் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த பால் வளச் சந்தையில், பால் (திரவம்) 64 சதவிகிதமும், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் 25 சதவிகிதமும், நெய் 7 சதவிகிதமும், பால் பவுடர் 4 சதவிகிதமும் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

ADVERTISEMENT

தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம், நறுமணமூட்டப்பட்ட பால், குழந்தைகளுக்கான பால் உணவுகள் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து வருவதால் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான பிரிவில் 20 சதவிகிதம் வரையில் வளர்ச்சி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து *லோட்டஸ் டெய்ரி புராடெக்ட்ஸ் லிமிடெட்* நிறுவனத்தின் இயக்குநரான அனுஜ் மோடி, *தி ஏசியன் ஏஜ்* ஊடகத்திடம் பேசுகையில்இந்தியாவின் பால் வளத் துறையில் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான பங்களிப்பு 2020ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாக உயரும். இத்துறையின் வளர்ச்சிக்கேற்ப பால் பொருட்களின் ஊட்டச்சத்து அம்சங்கள் இருப்பதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share