பாலிவுட் காஞ்சனாவின் ஃபர்ஸ்ட் லுக்!

Published On:

| By Balaji

அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் காஞ்சனா இந்தி ரீமேக்கான ‘லஷ்மி பாம்ப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

2011ஆம் ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற காஞ்சனா: முனி 2 திரைப்படம் கன்னடம், தெலுங்கு ரீமேக்கைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காகி வருகிறது. தமிழில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லக்ஷ்மி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் மாயா என்ற பெயரில் இலங்கையிலும், மாயாபினி என்ற பெயரில் பங்களாதேஷிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்தியில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக தோனி பயோபிக்கில் கவனம் ஈர்த்த கியாரா அத்வானி நடிக்கிறார். இவர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும் சரத்குமார் நடித்த பாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருவதாக பாலிவுட் மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில், ‘லஷ்மி பாம்ப்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கண்ணாடி முன்பு மேக் அப் போடும் அக்‌ஷய் குமாரின் போஸ்டர் வெளியான சில நொடிகளில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர் ஒருவர் திருநங்கையாக நடிக்கவிருப்பதை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இப்படத்தை தமிழில் இயக்கிய ராகவா லாரன்ஸே இயக்கிவருகிறார். இந்தியில் இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். எ கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுகிறது. அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி லக்‌ஷ்மி பாம்ப் திரைக்கு வரவிருக்கிறது.

.

ADVERTISEMENT

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://minnambalam.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://minnambalam.com/k/2019/05/18/52)

**

.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share