உதயநிதி படத்தில் பூமிகா

Published On:

| By Balaji

விஜய் நடித்த பத்ரி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூமிகா. பின்னர் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களிலிருந்து ஒதுங்கியே இருந்துவிட்டார் பூமிகா. சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான யூ-டர்ன் படத்தில் பூமிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பூமிகா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை மு.மாறன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே அருள்நிதி, மகிமா நம்பியார் உள்ளிட்டோரை வைத்து இயக்கிய ஆயிரம் கண்கள் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார்.

ADVERTISEMENT

இப்படத்தின் 50 விழுக்காடு படப்பிடிப்பு பணிகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டன. இதுமட்டுமல்லாமல், சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார். இப்படத்தில் பிரதாப் போத்தன், ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

**

ADVERTISEMENT

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

ADVERTISEMENT

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share