நாம் ஓட்டுப் போட்டது தோனிக்கு அல்ல!

By Balaji

|

Published on 12 Apr 2018, 12:00 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆர்ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 10ஆம் தேதியன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு தற்போது அரவிந்த் சாமி ரீடிவிட் செய்துள்ளார்.

இது குறித்து ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டரில், இன்று (ஏப்ரல் 10) ஐபிஎல் போட்டியில் நான் செய்ய வேண்டிய என் வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக இது எனது பங்களிப்பு. என் உணர்வுகளையும், என் மக்களின் உணர்வுகளையும் மதித்து, நான் எடுத்த இந்த முடிவுக்கு மதிப்பளித்த நிர்வாகத்தினருக்கு என் நன்றி.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தைப் பெறுவதற்காக நாம் ஐபிஎல் போட்டிகளை தேர்ந்தெடுத்தது சரியா என்ற கேள்வி எழுகிறது. நாட்டின் மொத்த கவனத்தையும் பெற வேண்டுமென்றால் 234 எம்எல்ஏக்களும், 40 எம்பிக்களும் ராஜினாமா செய்யலாம். எல்லோருமே ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று திரும்பிப் பார்ப்பார்கள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால் அது சரியாக இருக்கும். ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்குத்தான். தோனிக்குக் கிடையாது. இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு தீர்வை நோக்கிப் போராட வேண்டும்” இவ்வாறு கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த இரண்டு நாட்களாக இரண்டு வகையான போராட்டங்களை நாம் செய்திருக்கிறோம். ஒன்றில் நம் மக்களை நாமே தாக்கிக்கொண்டு, அனுதாபமற்ற எதிர்மறையான விளம்பரம் கிடைத்துள்ளது. மற்றொன்றில் நம் தேவை மற்றும் நோக்கம் குறித்து உலகளாவிய கவனம் கிடைத்துள்ளது. இதில் எது சிறந்தது என்று இனி வரும் காலங்களில் நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.,”

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel