டி-20: விட்டுவைக்க விரும்பாத இந்தியா!

Published On:

| By Balaji

இந்திய, இலங்கை அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி நாளை 6ம் தேதி, கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இந்தப்போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணி தற்போது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முறையே 3-0, 5-0 என முழுவதுமாக வென்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. அதுமட்டுமின்றி வரும் உலககோப்பைப் போட்டிக்கான நேரடித் தேர்வு பெறும் 8 அணிகளின் பட்டியலில் இருந்து இலங்கை அணி வெறியேறக் காரணமாக இருந்துள்ளது. மேலும் மீதமிருக்கும் ஒரே ஒரு டி-20 போட்டியையும் இந்திய அணி வென்று வெற்றியுடன் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ADVERTISEMENT

இலங்கையை பொறுத்தவரை நாளை நடைபெறவுள்ள டி-20 போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் தசுன் சனகாவும் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

**இந்திய அணி:**

ADVERTISEMENT

விராட்கோலி(கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், மனிஷ் பண்டே, ரஹானே, எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யு.சஹல், எஸ்.தாகூர், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா

**இலங்கை அணி:**

ADVERTISEMENT

உபுல் தரங்கா (கேப்டன்), அஞ்ஜலோ மேத்யூஸ், நிரோசன் டிக்வெல்லா, தில்சன் முனவீரா, தசுன் சனகா, மிலந்தா சிரிவர்தனா, வனிந்து ஹசரங்கா, அகிலா தனஞ்சயா, ஜெஃப்ரி வாண்டர்சே, இசுரு உடனா, சீக்குக் பிரசன்னா, திசரா பெரேரா, லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், விகும் சஞ்ச்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share