டேவிட் படத்திற்குப் பிறகு பிஜாய் நம்பியார் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் திரைப்படம் சோலோ. துல்கர் சல்மான் நான்கு விதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இதன் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படமும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்தையடுத்து, அக்டோபர் 5ஆம் தேதி படத்தை வெளியிட இருப்பதாகப் படக் குழு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 27) தெரிவித்திருக்கிறது.
நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நான்கு விதமாக உருவாகியுள்ள இதில், ருத்ரா, சிவன், சேகர் மற்றும் த்ரிலோக் ஆகிய நான்கு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துல்கர். இரண்டு பாத்திரங்கள் காதலை மையப்படுத்தியும், இரண்டு கோபத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. நெருப்பை மையமாகக் கொண்ட ருத்ரா கேரக்டரில் நேஹா ஷர்மா, நிலத்தை மையமாகக் கொண்ட சிவா கேரக்டரில் ஸ்ருதி ஹரிஹரன், நீரை மையமாகக் கொண்ட சேகர் கேரக்டரில் தன்ஷிகா ஆகியோர் துல்கருக்கு ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள்.

3 ஒளிப்பதிவாளர்களும் 11 இசையமைப்பாளர்களும் பணிபுரியும் இப்படத்தை ‘ரெஃபிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து பிஜாய் நம்பியார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘GETAWAY ஃபிலிம்ஸ்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

சேகர் கேரக்டர் டீசர் வெளிவந்ததையடுத்து தன்ஷிகாவுக்கும் துல்கருக்குமான மெலடி பாடல் ஒன்று வெளியாகி 1 லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.
[உயிராகி லிரிக்கல் வீடியோ](https://youtu.be/iZVJJKM8RMc)
