கிச்சன் கீர்த்தனா: சீஸ் பால்ஸ்!

தமிழகம்

வளரும் குழந்தைகளுக்கு தேவையான புரதம் சீஸில் அதிகம். மேலும் பொட்டாஷியமும் கால்சியச்சத்தும் அதிகமாக உள்ளது. இந்த சீஸை சாண்ட்விச், கிரேவி, புலாவ், பக்கோடா, கட்லெட் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் பால்ஸ் செய்து கொடுக்கலாம். அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

மொசரெல்லா சீஸ் – 20 சின்னத் துண்டுகள்
உருளைக்கிழங்கு – 4
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
பிரெட் கிரெம்ப்ஸ் – 50 கிராம்
முட்டையின் வெள்ளைக் கரு – ஒன்று
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் கலந்து வதக்கி இறக்கவும்.

இதை கைபொறுக்கும் சூட்டில் எடுத்து, நடுவே ஒரு சீஸ் துண்டினை வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உடைத்து ஊற்றவும். இதில் உருட்டி தயாராக வைத்துள்ள சீஸ் உருளைக்கிழங்கு உருண்டையை முக்கியெடுத்து பிரெட் கிரெம்ப்ஸில் புரட்டி, ஒரு தட்டில் அடுக்கவும்.

இப்படி எல்லா உருண்டைகளையும் தயார் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீஸ் பால்ஸை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  இதை பூண்டு சாஸ் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

சில்லி பனீர்

எல்லோருக்கும் ஏற்றவையா சிறுதானிய உணவுகள்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *