ஸ்மார்ட்போன் யூசர்கள், இந்தியாவுக்கு எப்போது வரும் எனக் காத்திருந்த மாடல்களில் ஒன்று Realme X2. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட Realme X2 மாடலுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. எனவே, மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டைக் கொண்ட இந்தியாவில், அந்த மாடல் அடுத்ததாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஃப்ளிப்கார்ட் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு வரப்போகும் இந்த மாடலில் ‘குவாட் கேமரா செட்டப்’ (Quad Camera) என்றழைக்கக்கூடிய நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்பக்க கேமரா மாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிக குவாலிட்டி போட்டோவுக்காக 64 மெகா பிக்சல் கொண்ட Samsung GW1 sensor கேமராவும், Wide Angle போட்டோக்களுக்காக 8 மெகா பிக்சல் கேமராவும், போட்டோக்களின் டெப்துக்காக 2 மெகா பிக்சல் கேமரா மற்றும் 4cm தொலைவில் உள்ள பொருட்களைக்கூட கச்சிதமாக படம்பிடிக்கும் இன்னொரு 2 மெகா பிக்சல் கேமரா என நான்கு கேமராக்களும் ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. செல்ஃபி எடுப்பதற்கு முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் கொண்ட கேமரா ஒன்றும் இருக்கிறது.
4000mah சக்தியுள்ள பேட்டரியில் இயங்கும் இந்த Realme X2, VOOC 4.0 Flash டெக்னாலஜியில் இயங்கக்கூடியது. எனவே, சார்ஜ் ஏறுவதற்கு எடுக்கும் காலம் கணிசமான நிமிடங்களுக்கு மாற்றப்பட்டு, சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக Realme X2 மாடலை மாற்றியிருக்கின்றன.
Realme X2 வெளியிடும் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ரிகர்சல் நிகழ்ச்சியை, அங்கு பணிபுரியும் யாரோ ஒருவர் போட்டோ எடுத்து வெளியிடப்பட்டுவிட்டதால், இரு வேறு திறன்களில் வெளியாகும் இந்த மாடல் 20,000 முதல் 21,000 ரூபாய் வரையில் விற்கப்படலாம் எனத் தெரிகிறது.,”