காங்கிரஸ்-திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் குழுவினருடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசம் இந்திரா காந்தி குடும்பத்திற்கு சொந்தமான மாநிலமாக இருந்தது. அங்குதான் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா என அனைவரும் நின்று வெற்றி பெற்றார்கள்.
80 தொகுதிகள் உள்ள உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் 11 தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு கொடுத்திருக்கிறார்.
இதன் அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் தான் இருக்கின்றன. அதில் எதற்கு காங்கிரசுக்கு 9 சீட் கொடுக்க வேண்டும்? 5 சீட் போதும் என்று திமுக தரப்பிலிருந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டுமென்று முதல்வருக்கு கோரிக்கை வைத்து பேசி வருகிறார்.
கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 5 தொகுதிகளில் நான்கில் இந்த முறை திமுக போட்டியிடுவதற்கு கணக்கு போட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்கள்: இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்கும் உதயநிதி
Video : இதயங்களை வென்ற சர்ஃப்ராஸ்… வறுத்தெடுக்கப்படும் ஜடேஜா