தமிழக அரசு 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியின் புதிய செயலாளராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை:
| அதிகாரி பெயர், தற்போதைய பதவி | மாற்றப்படும் பதவி |
| சத்யபிரத சாகு அரசு முதன்மைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. | அரசு முதன்மைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (31.12.2025 அன்று ஓய்வு பெறும் முனைவர் அதுல்ய மிஸ்ராவுக்குப் பதிலாக). |
| டாக்டர் கே.கே. பழனிசாமி ஆணையர், நில நிர்வாகம். | அரசுச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (சத்யபிரத சாகுவுக்குப் பதிலாக). |
| இரா.கஜலட்சுமி ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு. | ஆணையர், நில நிர்வாகம் (டாக்டர் கே.கே. பழனிசாமிக்குப் பதிலாக). |
| கிரண் குராலா ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம். | ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு (இரா.கஜலட்சுமிக்குப் பதிலாக). |
| தேவ் ராஜ் தேவ் முதன்மைச் செயலாளர்/துணைத் தலைவர், அறிவியல் நகரம். | முதன்மைச் செயலாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு உப்பு நிறுவனம் (முழு கூடுதல் பொறுப்புடன் பதவி வகித்து வரும் ஆர்.லலிதாவுக்குப் பதிலாக). |
| ஹர் சஹாய் மீனா முதன்மைச் செயலாளர்/ஆணையர், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி. | முதன்மைச் செயலாளர் / துணைத் தலைவர், அறிவியல் நகரம் (தேவ் ராஜ் தேவுக்குப் பதிலாக). |
| சு.மலர்விழி அரசு சிறப்புச் செயலாளர், நீர்வளத் துறை. | ஆணையர், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி (ஹர் சஹாய் மீனாவுக்குப் பதிலாக). |
| ச. கோபால சுந்தர ராஜ் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC). | இயக்குநர், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் (31.12.2025 அன்று ஓய்வு பெறும் விக்ரம் கபூருக்குப் பதிலாக). |
பானோத் ம்ருகேந்தர் லால் அரசு துணைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. | செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) (ச. கோபால சுந்தரராஜ்-க்குப் பதிலாக). |
