பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை… சொந்த ஊருக்கு செல்ல தயாராகும் பொதுமக்கள்!

Published On:

| By christopher

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 17-ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 4) உத்தரவிட்டார்.

இதன்மூலம் 6 நாட்கள் அரசு விடுமுறையுடன் மேலும் 3 நாட்கள் என மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜனவரி 15, 16, 18, 19 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும்.

அதற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஜனவரி 17-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடு செய்யும் வகையில், ஜன.25-ம் தேதி சனிக்கிழமையை பணி நாளாக அறிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவின் மூலம் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 14 முதல் 19 வரை 6 நாட்கள் கிடைத்துள்ளது.

பொங்கலுக்கு முந்தைய தினமான 13ஆம் தேதி திங்கள் கிழமை போகி பண்டிகை என்பதால் அதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்தால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

இதனால் பொங்கல் விடுமுறையையொட்டி இந்தாண்டு அதிகளவில் மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அதன் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பயணிகளின் வசதி கருதி ஏற்கெனவே பொங்கல் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதே போன்று அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அமித் ஷாவுக்கு ஆதியோகி சிலை பரிசளித்த சத்குரு

பிறந்தநாளில் தற்கொலை செய்துகொண்ட திருப்பூர் கல்லூரி மாணவர்: என்ன காரணம்?

ரூ.120 கோடி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பிணமாக மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share