சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதால் ரூ.869 கோடி நஷ்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி முடிந்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. இதனால், அரையிறுதி ஆட்டம் ஒன்றும் இறுதி ஆட்டமும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் உள்நாட்டில் பாகிஸ்தான் ஒரு ஆட்டம் மட்டுமே விளையாடியது. லாகூரில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதி தோற்றது. அடுத்து, துபாயில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் மழை காரணமாக கைவிடப்பட்டது.869 Crore Loss In Champions Trophy

பாகிஸ்தானில் போட்டி நடந்த கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை புணரமைக்கவே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பல கோடிகளை செலவழித்தது. மொத்தம் 98 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது. ஆனால், 6 மில்லியன் டாலர்தான் வருவாய் கிடைத்துள்ளது.
நஷ்டம் காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒரு ஆட்டத்தில் விளையாடினால் பாகிஸ்தான் வீரர்களுக்கு 40 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படும். தற்போது, அது 10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் , வீரர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மாட்டார்கள். இப்படியாக, நஷ்டத்தை சரிக்கட்ட பலக்கட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. 869 Crore Loss In Champions Trophy
ஒரு வேளை, இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடியிருந்தால், சாம்பியன்ஸ் டிராபியால் பல மடங்கு லாபம் ஈட்டியிருக்கும்.