தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஜோசப் விஜய் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, இன்று (மே 27) காலை 9:30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் புறப்பட்டார்.
அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், இன்று மாலை 4:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.
முதல்வருடன் தனி விமானத்தில் டெல்லி சென்றவர்களின் பட்டியல்:
பி. ஜெகதீஷ்
விஷ்ணு ரெட்டி எர்ராதொட்டி
பி. ராம்குமார்
ஜெகதீஷ் அவஸ்தி
சி. ராஜேந்திரன்
நயீம் (Nayeem Ayittandy Koovakandy)
ஜி. செந்தில்குமார்
நாரிசெட்டி மரியா ஜோசப் அனில்









