தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்த நிலையில், மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல் தஞ்சை, திருவாரூர், நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!
