இந்திய தண்ணீர் வாரம்

Published On:

| By Balaji

நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ள ‘இந்திய தண்ணீர் வாரம்’ நிகழ்ச்சிகளில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு, நீர்ப்பங்கீடு, நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் பாசன மேலாண்மை ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளனர். ‘இந்திய தண்ணீர் வாரம்’ ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை அனுசரிக்கப்படும். இதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார். இஸ்ரேல் நாட்டின் பங்களிப்பு மற்றும் குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களோடு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் தொழில்நுட்பக் கண்காட்சி, நீர்மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் பாசனத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சி மற்றும் திறன்பாடுகளை அதிகரிக்கும் கண்டுபிடிப்புகள் ஆகியவை இடம்பெறும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share