உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை : 7ஆவது மாநில நிதியாணையம் அமைப்பு!

Published On:

| By Kavi

7th State Finance Commission formed

7ஆவது மாநில நிதியாணையத்தை தமிழக அரசு இன்று (மே 29) அமைத்துள்ளது. 7th State Finance Commission formed

நகர்ப்புர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்தற்காக தமிழக அரசு இந்த நிதி ஆணையத்தை அமைத்துள்ளது.

ADVERTISEMENT

இதன் தலைவராக கே. அலாவுதீன், (ஓய்வுபெற்ற ஆட்சியர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அலுவல் சாரா உறுப்பினராக என்.தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி

ADVERTISEMENT

உறுப்பினர்களாக (அலுவல் வழி) நகராட்சி நிர்வாக இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலராக பிரத்திக் தாயள், அரசு துணைச் செயலாளர் (வரவு-செலவு) (முழு கூடுதல் பொறுப்பு), நிதித்துறை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த குழு கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதி நிலையை ஆய்வு செய்யும்.

ADVERTISEMENT

மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயினை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல், அத்தகைய வருவாயில் மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றிற்குரிய பங்குகளை முறையே பிரித்தளித்தல்

 ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்தல்;

மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும்.

2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அளித்திடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7th State Finance Commission formed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share