நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆகஸ்ட் 15-ந் தேதி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.
இதனைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். அப்போது ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து மலர்தூவி மரியாதை செலுத்தின. பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை:
