மாணவர்களின் கற்றலில் ஸ்மார்ட்போன்களின் இடையூறு காரணமாக வகுப்பறைகளில் அதனைப் பயன்படுத்துவதற்கு உலகெங்கிலும் சுமார் 79 கல்வி அமைப்புகள் தடை விதித்துள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. 79 edu systems says no to smartphone
இன்றைய உலகில் தொழில்நுட்பங்கள் உச்சம் பெற்று வரும் நிலையில், கையடைக்க ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் பிரசவ வார்டு முதல் வீட்டுக்கழிவறை வரை வந்துவிட்டது.
குறிப்பாக மாணவர்களின் கற்றல் திறனுக்கு உதவும் ஸ்மார்ட் போன்கள், இன்று பெரும் இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது.

உலகநாடுகளில் எப்படி? 79 edu systems says no to smartphone
இந்த நிலையில் யுனெஸ்கோ உலகளாவிய கல்வி கண்காணிப்பு (GEM) குழு கடந்த 2023ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இறுதியில், 60 கல்வி அமைப்புகள் (உலகளவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து கல்வி முறைகளிலும் 30 சதவீதம்) வகுப்பறைகளில் ஸ்மார்ட்போன்களைத் தடைசெய்யும் சிறப்புச் சட்டங்கள் அல்லது விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தது.
அதுவே 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 79 (40 சதவீதம்) கல்வி அமைப்புகளாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து தற்போது வரை வெளிப்படையான சட்டம் அல்லது கொள்கை எதுவும் இல்லை.
அதேவேளையில், பிரான்சில் உள்ள கீழ்நிலைப் பள்ளிகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்காக “டிஜிட்டல் இடைவேளையை” பரிந்துரைத்துள்ளன. மாற்றுத்திறனாளி அமைப்புகளின் மருத்துவ இயல்பு பற்றிய புகார்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியா கல்வி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் மீதான தடையை நீக்கியது.
சீனாவின் ஜெங்ஜோவ் நகரில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் கூடுதலாக, கல்வி நோக்கங்களுக்காக தொலைபேசி பயன்படுத்தவது தொடர்பாக, அதற்குரிய ஆவணத்தில் பெற்றோர்கள் கையெழுத்திட வேண்டும் என்று விதியை அமல்படுத்தியுள்ளது.
பல ஜெர்மன் மாநிலங்களில், மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. கூகிள் வொர்க்ஸ்பேஸ் டென்மார்க் மற்றும் பிரான்சில் தடைசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஸ்மார்ட்போனை கல்விநிறுவனங்களில் பயன்படுத்த ஒவ்வொரு மாகாணமும் வெவ்வெறு விதமான விதிகளை கொண்டுள்ளன.

கவனத்தை திசைதிருப்புகின்றன! 79 edu systems says no to smartphone
யுனெஸ்கோவின் GEM குழு தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை 14 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பல முக்கிய விஷயங்களை கண்டறிந்துள்ளது.
“சில தொழில்நுட்பங்கள் சில சூழல்களில் மாணவர்களின் கற்றலை ஆதரிக்கக்கூடும், ஆனால் அதிகமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால் அதுவே ஆபத்தாக மாறிவிடும்.
வகுப்பறையில் ஸ்மார்ட்போன்கள் கற்றலுக்கு இடையூறு விளைவிக்கின்றன மற்றும் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றன” என யுனெஸ்கோ அறிக்கை கூறுகிறது.