78ஆவது சுதந்திர தினம் : தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி

Published On:

| By Kavi

இன்று(ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதிக்கு சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

பின்னர் அங்கிருந்து செங்கோட்டை சென்ற பிரதமர் மோடி, அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து நாட்டுப்பண் ஒலிக்க  செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன.

ADVERTISEMENT

2024 தேர்தல் வெற்றிக்கு பிறகு முதன்முறையாக மோடி கொடி ஏற்றினார். அதேசமயம் 2014ல் இருந்து 11ஆவது முறையாக கொடி ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஓம் பிர்லா,   ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஸ்னவ் என மத்திய அமைச்சர்கள்,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என பலரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

பியூட்டி டிப்ஸ்: ஹேர் கட் பண்ணப் போறீங்களா..?  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share