டெல்லியில் களைகட்டிய 77-வது குடியரசு தின விழா- இன்று முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு

Published On:

| By Mathi

2026 RDay

நாட்டின் 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் களைகட்டி உள்ளன.

நாடு முழுவதும் 77-வது குடியரசு தினம் இன்று ஜனவரி 26-ந் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். அப்போது, நாட்டின் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா பங்கேற்கின்றனர்.

டெல்லி குடியரசு தின விழாவில் ஐரோப்பிய யூனியன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் இடம் பெற உள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி, நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share