நாட்டில் 77 சதவிகிதம் பேருக்கு உடல் பருமன்: எங்கு தெரியுமா?

Published On:

| By Monisha

77 percent of Kuwait's population is obese

உலகம் முழுவதும் உடல் பருமன் நோய் பெரும் சுகாதார பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. உலகளாவிய உடல் பருமன் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவிகிதம் பேருக்கு உடல் பருமன் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வளைகுடா மக்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் தொடர்பாக தனியார் அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை உள் மருத்துவம் மற்றும் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் வஃபா அல்-ஹஷாஷ் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், வளைகுடா நாடுகளில் குவைத் நாட்டில்தான் அதிக அளவிலான உடல் பருமன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குவைத் நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவிகிதம் பேருக்கு உடல் பருமன் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாட்டில் மரணத்துக்கு வழிவகுக்கும் காரணிகளில் ஐந்தாவது முக்கிய ஆபத்து காரணியாக உடல் பருமன் மாறியுள்ளதாக கூறும் டாக்டர் வஃபா அல்-ஹஷாஷ், “குவைத்தில் 18 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களுக்கு அதிக அளவில் உடல் பருமன் பாதிப்பு இருப்பது கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.

ADVERTISEMENT

உடல் பருமன் காரணமாக சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம், தூக்கமின்மை, குறட்டை, மூட்டுவலி, தண்டுவடப் பிரச்சினைகள் உள்ளிட்டவை வர வாய்ப்புகள் இருக்கின்றன. உடல் பருமனால் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சுரப்பு பாதிப்பால் விரைவாக பூப்படைந்து விடுகின்றனர்” என்றும் டாக்டர் வஃபா அல்-ஹஷாஷ் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சுவாரசியம் அடையும் உலகக்கோப்பை: பாகிஸ்தான் அபார வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share