சர்வதேச பாகிஸ்தான் விமான நிலையத்தின் 7,000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் விமான நிலைய நிர்வாகம் பொருளாதார சிக்கல்களில் மாட்டியிருப்பதே ஊதிய நிலுவைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 7,000 ஊழியர்களுக்கு சென்ற நவம்பர் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாத நிலையில், விமான நிலையத்தில் தொடரும் எரிபொருள் பற்றாக்குறையே இந்த பிரச்னைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த எரிபொருள் பற்றாக்குறை குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் நிலுவை ஊதியத் தொகை செலுத்தப்படவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும் என தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என விமான நிலையத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (PSO) வழங்கிய குறைந்த எரிபொருளால், பல சர்வதேச விமானங்களை ரத்து செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலைய நிர்வாகத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படி பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தான் விமான நிலையம் தற்போது வங்கிகளிடம் கடன் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சென்னையில் மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
பியூட்டி டிப்ஸ்: சருமத்துக்கு முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவது சரியானதா?