சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘குட் நியூஸ்’: புதிதாக 7 பாடங்கள்… வாரியத்தின் அதிரடி மாற்றம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

7 New Subjects in CBSE

புதுடெல்லி:

“இன்ஜினியரிங், டாக்டர் படிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை; கையில் ஒரு தொழில் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் பிழைத்துக்கொள்ளலாம்” என்ற நிலைமை மாறி வருகிறது. இதற்கு ஏற்றார்போல், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது பாடத்திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் வகையில், புதிதாக 7 பாடங்களைச் சேர்க்க சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

ADVERTISEMENT

வழக்கமான அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களைத் தாண்டி, மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய பாடங்கள் என்னென்ன?

ADVERTISEMENT

தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) அடிப்படையில், மாணவர்களுக்குத் தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பள்ளிக் காலத்திலேயே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் கீழ்க்கண்ட பாடங்கள் அல்லது அது சார்ந்த திறன் மேம்பாட்டுப் பாடங்களை (Skill Subjects) மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.

குறிப்பாக, வடிவமைப்புச் சிந்தனை (Design Thinking), பிஸிக்கல் ஆக்டிவிட்டி ட்ரைனர் (Physical Activity Trainer), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் போன்ற நவீனத் தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் சார்ந்த 7 புதிய பாடங்கள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

யாருக்கு என்ன லாபம்?

“ஏற்கனவே இருக்கும் பாடங்களைப் படிப்பதற்கே நேரம் போதவில்லை, இதில் இது வேறா?” என்று மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. இவை அனைத்தும் விருப்பப் பாடங்கள் (Elective Subjects) அல்லது திறன் சார் பாடங்கள் வகையைச் சேர்ந்தவை. இந்தப் பாடங்களைப் படிப்பதன் மூலம் மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்பை முடிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட துறையில் அடிப்படை அறிவு கிடைத்துவிடும். வருங்காலத்தில் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கும்போது, இது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

மதிப்பெண் கணக்கீட்டில் சலுகை?

சிபிஎஸ்இயின் விதிகளின்படி, திறன் சார் பாடங்களை (Skill Subjects) மாணவர்கள் தேர்வு செய்யும்போது, ஒருவேளை அவர்கள் மூன்று முக்கியப் பாடங்களில் (Science, Maths, Social Science) ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தாலோ அல்லது குறைவான மதிப்பெண் பெற்றாலோ, இந்தத் திறன் சார் பாடத்தின் மதிப்பெண்ணை அதற்குப் பதிலாக மாற்றிக்கொள்ளும் (Best of 5 Rule) வசதியும் சில நேரங்களில் மாணவர்களுக்குக் கைகொடுக்கும்.

பெற்றோர்கள் வரவேற்பு:

“வெறும் மனப்பாடம் செய்யும் முறை மாறி, இதுபோன்று நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. இது மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை உறுதி செய்யும்” என்று கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
வரும் கல்வியாண்டு முதலே இந்தப் புதிய பாடத் தேர்வுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share