பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 6-வது வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அடுத்த ஆண்டிற்குள் (2023) 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி, தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் வந்தே பாரத் ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது.
5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இன்று (டிசம்பர் 11) சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் – மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே 6-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.
தொடர்ந்து நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டடத்தைத் திறந்து வைத்து இரண்டாவது கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் நாக்பூர் மற்றும் ஷீரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கிறார்.
நாக்பூரில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், நாக்பூரில் இன்று ரூ. 75,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
பின்னர் இன்று மாலை கோவாவில் மோபா சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மோனிஷா
உக்ரைன் போர் குறித்து பேசியபோது கண்ணீர்விட்ட போப்
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: சர்ச்சையான ஆர்யா பட டைட்டில்!