9
வாகனத்தில் முன் பகுதியில் அமர்ந்திருந்த இளம் பெண்களை கியர் போட அனுமதித்த டிரைவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் செயலில் ஈடுபட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தில் முன் பகுதியில் அமர்ந்திருக்கும் இளம் பெண்கள், கியரை மாற்றி மாற்றி போடுகின்றனர்.
இதற்குக் கண்டிப்பு எதுவும் தெரிவிக்காமல் அந்த டிரைவர் சிரித்துக்கொண்டே, அந்த பெண்கள் கியரை மாற்ற சொல்லித் தருகிறார். எதோ விளையாட்டுப் பொருள் போல் அந்த பெண்களும் கியரை மாற்றி மாற்றிப் போடுகின்றனர். இது வீடியோவாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ அம்மாநில போக்குவரத்துத் துறை கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து, வயநாட்டைச் சேர்ந்த அந்த ஓட்டுநரான வாஜியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதத்துக்கு ரத்து செய்து ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வாஜிக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பொறுப்பற்று நடந்துகொண்ட அந்த ஓட்டுநருக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.�,”