ADVERTISEMENT

பீகாரில் 65.20 லட்சம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Published On:

| By Minnambalam Desk

பீகார் மாநிலத்தில் 65.20 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து 65.20 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டனர். 35 லட்சம் பேர் நிரந்தரமாக பீகாருக்கு வெளியே இடம் பெயர்ந்துள்ளனர். 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

7.9 கோடி வாக்காளர்களில், 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசு பீகார் தேர்தல் வெற்றிக்காக வாக்காளர்களை திட்டமிட்டு நீக்க தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாகவும், தேர்தல் ஆணையர் நியமன முறையை மாற்றியதில் இருந்தே இத்தகைய முறைகேடுகள் துவங்கி விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share