இந்தியாவிலேயே முதன்முறை : எம்பூரான் படத்துக்கு 24 மணி நேரத்தில் 6,45,000 டிக்கெட்டுகள் புக்கிங்!

Published On:

| By Kumaresan M

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுகிறது. பான் இந்தியா படமான இது தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு, இரு நாட்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று மோகன்லால் வழிபட்டார். ஐயப்பனுக்கு மோகன்லால் நெய்யாபிஷேகம் வழிபாடும் நடத்தினார்.tickets sold for empuraan

இந்த நிலையில், நேற்று எம்புரான் படத்தின் டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கியது. மார்ச் 21 காலை 9 மணிக்கு புக்கிங் தொடங்கிய அடுத்த 24 மணி நேரத்துக்கு 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் புக் மை ஷோ ஆப்பில் மட்டும் விற்பனையாகியுள்ளது. இவ்வளவு டிக்கெட்டுகள் ஒரு இந்திய படத்துக்கு புக்கானது இந்தியாவில் இதுவே முதன்முறை.

ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி அடுத்த சாதனையையும் எம்பூரான் படம் படைத்துள்ளது. இந்த படம் ஐமேக்ஸ் வெளியிடும் முதல் மலையாள படமாகும். லைகா, ஆசிர்வாத் சினிமாஸ், கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.tickets sold for empuraan

நடிகர் பிரிதிவிராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்பூரான் வெளியாகிறது.இந்த படத்தில் ‘Game of Thrones’ சீரியல் நடிகர் ஜெரொம் ஃப்ளைன் முதல் முறையாக இந்திய படத்தில் நடித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் எம்பூரான் படத்தின் டிரெய்லர் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெங்களுருவிலுள்ள குட்ஷெபர்ட் கல்லூரி படம் வெளியாகும் மார்ச் 27 ஆம் தேதி விடுமுறை அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share