தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்தும் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, அரியலூர் எஸ்பியாக தீபக் சிவாச், தஞ்சாவூர் எஸ்.பியாக ராஜாராம், புதுக்கோட்டை எஸ்.பி அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பி யாதவ் கிரிஷிக் அஷோக்,
கன்னியாகுமரி எஸ்.பி ஸ்டாலின், சிவகங்கை எஸ்.பி ஆஷிஷ் ராவத், கடலூர் எஸ்.பி ஜெயக்குமார், ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகனந்தா சுக்லா, தென்காசி எஸ்.பி அரவிந்த், திருச்சி எஸ்.பி செல்வநாகரத்தினம், திருவாரூர் எஸ்.பி கருண் உத்தவ் ராவ், விழுப்புரம் எஸ்.பியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாகவும், ஏடிஜிபி வெங்கட்ராமன் நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாகவும், ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே தலைமையிட சிறப்பு டிஜிபியாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருச்சி எஸ்.பி வருண் குமார் திருச்சி சரக டிஐஜியாகவும், புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக டிஐஜியாகவும், ஈரோடு சிறப்பு படை எஸ்.பி சசிமோகன் கோவை சரக டிஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா சித்த மருத்துவம்?
பியூட்டி டிப்ஸ்: டார்க் கலர் நெயில் பாலிஷ் விரும்பிகளா நீங்க? ஒரு நிமிஷம்!