மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 18 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (மே 10) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று (மே 10) இரவு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
“மின்வாரிய ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 1.12.2019 அன்று பெறப்பட்ட ஊதியத்தில் இருந்து 6 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் உடன்பாடு ஏற்பட்டது” என்று கூறினார்.
“அதுபோன்று 1.12.2019 ஆம் நாளன்று 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணி பலனாக 3 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு காரணமாக அரசுக்கு 527 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்” என்று கூறினார்.
பிரியா
ஓபிஎஸ் மகனுக்கு எதிராக சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு!
ஆட்சி அரியணையில் அமரப்போவது யார்?: கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!
“மக்களிடம் நல்ல பெயர்”: ஆய்வுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!