தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. ஆட்சி அமைந்தது முதல் தொடர்ந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று 6 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜதக் சிரு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராகவும்,
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ் பொதுப்பணித்துறை செயலாளராகவும்,
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சிறப்புச் செயலாளர் சந்தீப் நந்தூரி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராகவும்,
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் உமா மகேஸ்வரி கைத்தறித் துறை இயக்குநராகவும்,

பேரூராட்சிகள் இயக்குநர் பிரதீப் குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராகவும்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளர் அழகுமீனா மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், காதி மற்றும் கிராமத்தொழில் மேம்பாட்டு வாரிய செயலாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி வருவாய், நிதித்துறை துணை ஆணையராக சித்ரா விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
