உத்தரப்பிரதேசத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி சுமார் 6௦௦௦ வழக்குகளை முடித்து வைத்து உலக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேசம், முசாபர் நகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக பணியாற்றிவரும் தேஜ்பகதூர் சிங் கூறியதாவது: நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், வழக்குதாரர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இதுபோன்று அதிகளவில் வழக்குகளை முடித்து வைத்தது இதுவே முதன்முறையாகும். குடும்ப நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சுமார் 903 தம்பதியினர் ஒன்று சேர்ந்துள்ளனர். வழக்கறிஞர்கள் போராட்டம் மேற்கொண்டபோதும், 327 நாட்களில் 6,065 வழக்குகளை முடித்துவைத்ததாகக் கூறியுள்ளார்.
இதுபோன்று, அதிக எண்ணிக்கையில் வழக்குகளை முடித்துவைத்த முதன்மை நீதிபதி தேஜ்பகதூர் சிங் பெயர் கின்னஸ் சாதனைப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.