திருப்பூரில் SIR கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு பின் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீடு கடந்த நவம்பர் 4-ம் தேதி துவங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது . இதைத்தொடர்ந்து இன்று (டிசம்பர் 19) 8 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
அதில் மொத்த வாக்காளர்கள் 18,81,144 உள்ளனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களில் 23 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

