ADVERTISEMENT

பாராசிட்டமால் உட்பட 53 மருந்துகள் தரமானவை அல்ல!

Published On:

| By Kavi

53 medicines including paracetamol are Failed in Drugs Quality Test - CDSCO report

பாராசிட்டமால், பான் டீ, கால்சியம் மாத்திரைகள் உட்பட மக்கள் மிக அதிகம் பயன்படுத்தும் 53 மருந்துகள், நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இல்லை என்று இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

ADVERTISEMENT

அதன்படி 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட மருந்துகளைப் பரிசோதித்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம், பாராசிட்டமால், வைட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரைகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள் நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை என்று அறிவித்துள்ளது.

வைட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி சாஃப்ட்ஜெல்ஸ், ஆன்டி-ஆசிட் பான்-டி, பாராசிட்டமால் மாத்திரைகள் (ஐபி500 எம்.ஜி),

ADVERTISEMENT

நீரிழிவு மாத்திரையான கிளிமிபிரைடு, ரத்த அழுத்த மாத்திரையான டெல்மிசார்டன் போன்ற மக்கள் அதிகம் வாங்கும் மாத்திரைகளே இந்த தரக்கட்டுப்பாட்டுச் சோதனையில் தோல்வி அடைந்துள்ளன.

சத்து மாத்திரைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஷெல்கால் மாத்திரையும் தோல்வியடைந்திருக்கிறது. இவற்றை ஹெடெரோ டிரக்ஸ், ஆல்கெம் லெபாரடரிஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடட் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

ADVERTISEMENT

அத்துடன் கொல்கத்தா மருந்து ஆய்வகக்கூடத்தில் கிளாவம் 625, பான் டி போன்ற மாத்திரைகள் போலியானவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு சாதாரண தொற்றுகளுக்குக் கொடுக்கும் மருந்தான கெபோடெம் எக்ஸ்பி 50 மருந்தும் தரக்கட்டுபாட்டு சோதனையில் தோல்வியடைந்திருக்கிறது.

இது ஆய்வறிக்கை தொடர்பாக பதிலளித்திருக்கும் மருந்து நிறுவனங்கள், சோதனையில் தோல்வியடைந்த மருந்துகள், தங்கள் நிறுவனத் தயாரிப்பு அல்ல என்றும் போலி மருந்துகள் என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளன.

இதைத் தொடர்ந்து இந்த ஆய்வுகளின் முடிவுகள், அதைப் பயன்படுத்துவது தொடர்பான கவலையை மக்களிடம் அதிகரித்துள்ளது.

பொதுவாகவே மாத்திரைகளை உட்கொள்ளும்போது, ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது எழுதப்பட்ட விதி.

இஷ்டப்படி தரமற்ற மாத்திரைகளை உட்கொள்வதால் என்னவாகும் என்பது எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது என்று புலம்புகிறார்கள் இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பயனாளிகள்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை சாதம்!

எஸ்.பி.பி பெயரில் சாலை : ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: அமேசானின் புதிய முயற்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share