சிபிஎம்-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், -திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகமும் இன்று (23-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 (ஐந்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. “ என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.

ADVERTISEMENT

அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 23) இரவு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share